/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு பலி
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு பலி
ADDED : ஜூன் 03, 2025 02:01 AM
ஷிவமொக்கா: நாட்டு வெடிகுண்டு வெடித்து, நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு உயிரிழந்தது.
ஷிவமொக்கா, பத்ராவதி நகரின் பொம்மனக்கட்டே பகுதியில் உள்ள வயலில், நேற்று முன்தினம் பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த பள்ளம் ஒன்றில் பசு விழந்தது. அங்கிருந்து குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டது. சம்பவ இடத்திலேயே பசு உயிரிழந்தது.
இதை பார்த்த அப்பகுதியினர் பத்ராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து, பசு இறந்தது தெரிய வந்தது. இதை தயார் செய்தவர், அதே பகுதியை சேர்ந்த குரு, 45, என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்ததில், காட்டுப்பன்றிகள் வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்து, காய வைப்பதற்காக பள்ளத்தில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டார்.