sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தேவனஹள்ளி தொகுதியில் கிரிக்கெட் போட்டிகள்

/

 தேவனஹள்ளி தொகுதியில் கிரிக்கெட் போட்டிகள்

 தேவனஹள்ளி தொகுதியில் கிரிக்கெட் போட்டிகள்

 தேவனஹள்ளி தொகுதியில் கிரிக்கெட் போட்டிகள்


ADDED : மார் 30, 2026 04:39 AM

Google News

ADDED : மார் 30, 2026 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி: தேவனஹள்ளி தொகுதியில் பல கிராமங்களில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இன்று இறுதி போட்டி நடக்கிறது.

தேவனஹள்ளியில் கிரிக்கெட் வீரர்களை நேற்று சந்தித்த அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா, அவர்களை உற்சாகப்படுத்தி பேசியதாவது:

இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். தேவனஹள்ளி தாலுகா கத்திமாரம்மா கோவிலின் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பிரிமியர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

விளையாட்டு திறன் மூலம் ஒழுக்கம், தலைமைத்துவம், நேரம் மேலாண்மை, கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வெளிபடுத்த முடியும். விளையாட்டு மட்டுமே இதற்கான சரியான பாடத்தை கற்பிக்கிறது. எனவே இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும்

தேவனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட குந்தாணா, கசபா, விஜயபுரம், சென்னராய பட்டணா, துாபகெரே உட்பட பல்வேறு பகுதியில் கிரிக்கெட் போட்டியை இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிதலுார் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கோடகுர்கி நாகராஜ் பேசுகையில், ''இளைஞர்களை உற்சாகப்படுத்த விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இவர்களின் ஆர்வத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

கிரிக்கெட் போட்டியில் 250 அணிகள் பங்கேற்றனர். இறுதி போட்டி இன்று நடக்கிறது. விளையாட்டுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தரப்படும். தங்கள் பகுதியில் அவசியமான அடிப்படை வசதிகள் கிடைக்க உதவிகள் செய்து தரப்படும்,'' என்றார்.

சர்வதேச விமான நிலையப்பகுதி திட்டத் தலைவர் சாந்தகுமார், காங்கிரஸ் பிரமுகர்கள் கே.சி.நாதன், பிரசன்னகுமார், ஹித்தரஹள்ளி ரமேஷ், கண்ணமங்களா நாகேஷ், கோபாலசாமி, சுரேஷ், ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் தாலுகா தலைவர் சேகர், செயலர் மனு, ரமேஷ், முனிகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us