ADDED : மே 24, 2026 11:33 PM

பெங்களூரு: பெங்களூரின் பொம்மசந்திராவில் உள்ள எஸ்.எல்.எஸ்., விளையாட்டு அரங்கில், கே.எஸ்.சி.ஏ., சார்பில் கிரிக்கெட் போட்டி, நேற்று நடந்தது.
இதில் ஷிவமொக்காவின் அக்ஷய், 36, சபீயர் அணி தரப்பில் விளையாடினார். நான்கு ஓவர் பவுலிங் செய்தார்.
அதன் பின் பீல்டிங் செய்யும் போது, உடல் சோர்வடைந்தது. விளையாட முடியாமல், அரங்கத்தை விட்டு வெளியே வந்து, ஓய்வு எடுத்தார்.
வாழைப்பழம் சாப்பிட்டு, தண்ணீர் அருந்திவிட்டு ஓய்வறைக்கு சென்ற அக்ஷய், திடீரென கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்து ஆவலஹள்ளி போலீசார், மருத்துவமனைக்கு சென்று, பார்வையிட்டனர்.
அக்ஷய் திறமையான விளையாட்டு வீரர். ரஞ்சி கோப்பை உட்பட, பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, திறமையாக விளையாடிய அனுபவம் உள்ளவர்.
அனைவருடனும் ஜாலியாக இருப்பவர். இவரது மறைவு நண்பர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
