ADDED : ஜூலை 01, 2026 08:23 AM
ஆடு திருடன் கைது
கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவின், எப்பரி கிராமத்தில், நேற்று அதிகாலை பைக்கில் வந்த இரண்டு நபர்கள், சுந்தரப்பா என்பவரின் கொட்டகையில் இருந்த ஆடுகளை திருட முயற்சித்தனர். அப்போது அங்கு படுத்திருந்த சுந்தரப்பா அலறினார். அப்பகுதியினர் ஆடு திருடர்களை விரட்டிய போது, ராகவேந்திரா சிக்கினார். மற்றொருவர் தப்பிவிட்டார். சிக்கியவரை கிராமத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டவரில் ஏறிய கணவர்
கதக் மாவட்டம், முன்டரகி தாலுகாவின் கோர்லஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நஜீர் சாப். இவரது மனைவி சண்டை போட்டு, கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் அங்கு சென்ற நஜீர்சாப், மனைவியை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவரது மாமியார் வீட்டினர் திட்டி அவமதித்தனர். இதனால் மனம் நொந்த நஜீர்சாப், அங்கிருந்த உயரமான டவர் மீது ஏறி, 'மனைவி தன்னுடன் வர வேண்டும்' என, பிடிவாதம் பிடித்தார். போலீசார் அங்கு வந்து, அவரை சமாதானம் செய்து, கீழே இறக்கினர்.
6 மீனவர்கள் மீட்பு
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் அருகில் உள்ள அரபி கடலில், ராட்சத அலைகளில் சிக்கியதில், மீன் பிடி படகு கவிழ்ந்தது. இதில் இருந்த மீனவர்களை, கடலோர காவல் படையினர் காப்பாற்றினர்.
