விவசாய நிலங்களில் பம்ப் செட்களுக்கு பயன் படுத்தும் அலுமினியம் மின் கம்பிகளை திருடி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மாலுாரை சேர்ந்த சுதர்ஷன், 26. மதுசூதன், 19 ஆகிய இருவரை பங்கார்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் திருடிய, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 532 கிலோ அலுமினிய மின் கம்பிகளையும், திருட்டுக்கு பயன்படுத்திய 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மின் கம்பிகள் திருட்டு உட்பட பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், ஆஞ்சி எனும் ராமாஞ்சி, 54. இவர் சிக்கபல்லாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர். இவர், முல்பாகலின் நரசிம்ம தீர்த்தா அருகில் உள்ள, சித்தார்த்தா நகரில் இருப்பதை போலீசார் அறிந்தனர். நேற்று அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.