ADDED : ஜூன் 24, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்கா நகரில் இருந்து சரக்கு வாகனம் காம்பவுன்ட் சுவர்களுக்கு பயன்படுத்தும் சிமென்ட் கம்பங்களை ஏற்றிய படி, பெலகாவிக்கு நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. சரக்கு வாகனத்தில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் இருந்தனர்.
பெலகாவி மாவட்டம், கித்துார் தாலுகாவின், தேசிய நெடுஞ்சாலை - 407ல், நேற்று அதிகாலையில் செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம், சாலை டிவைடரில் மோதி கவிழ்ந்தது.
தொழிலாளர்கள் ஆதில் கான், 26, பவன், 26, நஜீர் கான், 25, ஆகியோர் உயிரிழந்தனர். இறந்த மூவரும் உத்தரபிரதேச மாநிலம், உன்னவ் மாவட்டம், குரசட் கிராமத்தை சேர்ந்தவர்கள். இருவர் காயம் அடைந்தனர். நால்வர் உயிர் தப்பினர்.
