தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : செப் 25, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர் மீது தாக்குதல் பீதரின் அவுராதில் இருந்து, அரசு பஸ் நேற்று காலை பீதர் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பயணியர் நெரிசல் அதிகம் இருந்தது. ஒரு இருக்கையில் நான்கைந்து பேர் அமரும்படி, நடத்துநர் கூறியதால் அவருக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. சுபாஷ் என்ற மாணவரை நடத்துநர், தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவர் வலியுறுத்தியுள்ளார்.

சந்தன கட்டைகள் மீட்பு உத்தரகன்னடா, எல்லாபுராவின் பிசகோடா சாலையில் வாகனத்தில் சந்தன கட்டைகள் கடத்துவதாக, போலீசாருக்கு புகார் வந்தது. வனத்துறை அதிகாரிகள், நேற்று முன் தினம் அங்கு சென்று சோதனையிட்டு, இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, 58 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். நால்வரை கைது செய்தனர்.

தாபா உரிமையாளர் கொலை பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், வார்டனாக பணியாற்றும் அடிவெப்பா, விடுமுறைக்காக சொந்த ஊரான பாகல்கோட்டின், கத்தனகேரி கிராமத்துக்கு சென்றிருந்தார். செப்டம்பர் 17ம் தேதி இரவு, கத்தனகேரி கிராஸ் அருகில் உள்ள தாபாவுக்கு உணவுக்காக சென்றார்.

அப்போது உணவு காலியாகிவிட்டது என, தாபா உரிமையாளர் மெஹபூப்சாப் பட்டாலே,56, கூறியதால் கோபமடைந்த அடிவெப்பா, தகராறு செய்து தாபா உரிமையாளரை கண் மூடித்தனமாக தாக்கினார். இதில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று மதியம் உயிரிழந்தார்.

தேனீ கொட்டி மூதாட்டி பலி தட்சிண கன்னடா, பன்ட்வாலின், பி.கஸ்பா கிராமத்தை சேர்ந்த கமலா, 75, நேற்று முன் தினம் பாக்கு தோட்டத்தில் பணியாற்றும் போது, தேனீக்கள் கொட்டின. வீட்டுக்கு வந்து மகனிடம் கூறினார். மகனும் உடனடியாக தாயை, கிராமத்தின் கிளினிக்குக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். ஆனால் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில், கமலா மயங்கினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்தில் மாணவி பலி பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா ஹோம்பலகட்டா கிராமத்தில் வசித்தவர் இஞ்சாரா, 20. தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்தார். நேற்று மாலை கல்லுாரி முடிந்ததும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார்.

அந்த வழியாக சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்ட இஞ்சாரா இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us