/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... அதிகரிப்பு!:8 மாதத்தில் 644 பலாத்காரம், 80 வரதட்சணை இறப்பு
/
கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... அதிகரிப்பு!:8 மாதத்தில் 644 பலாத்காரம், 80 வரதட்சணை இறப்பு
கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... அதிகரிப்பு!:8 மாதத்தில் 644 பலாத்காரம், 80 வரதட்சணை இறப்பு
கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்... அதிகரிப்பு!:8 மாதத்தில் 644 பலாத்காரம், 80 வரதட்சணை இறப்பு
ADDED : செப் 23, 2025 05:01 AM

பெங்களூரு: கர்நாடகாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. 8 மாதத்தில் 644 பலாத்காரம், 80 வரதட்சணை இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், மகளிர் பாதுகாப்பு சட்டத்தை, மேலும் கடினமாக செயல்படுத்த, போலீஸ்துறை தயாராகி வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக, வலுவான சட்டங்கள் அமலில் உள்ளன. போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை வழக்குகளில் துரிதமாக விசாரணை நடத்தி, சாட்சி, ஆதாரங்கள் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்கின்றனர்.
ஆனாலும், பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமைகள் கட்டுக்குள் வரவில்லை.
போலீஸ் துறை அளித்துள்ள, புள்ளி விபரங்களின்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான எட்டு மாதங்களில், 644 பாலியல் பலாத்காரம், 80 வரதட்சணை இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதை தீவிரமாக கருதிய போலீஸ் துறை, மகளிர் பாதுகாப்பு சட்டம் - 2005ஐ, கடுமையாக செயல்படுத்த தயாராகிறது.
உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை, போலீஸ் துறை தீவிரமாக கருதுகிறது. இதை கட்டுப்படுத்த பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை வலுவாக செயல்படுத்துவோம். மாநிலத்தின் எந்த போலீஸ் நிலையத்திலும், பெண்கள் புகார் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
அங்கு புகாரை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒரு உறுப்பினர், மற்றொரு உறுப்பினரை தாக்குவது, மிரட்டுவது, தொந்தரவு கொடுப்பதும் கூட, வன்முறையாக கருத வேண்டும். ஆனால், பெண்ணுக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே, குடும்ப வன்முறையாக கருதப்படுகிறது.
கணவரோ அல்லது மூன்றாம் பாலினத்தவரும், தங்கள் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது குறித்தும், விசாரிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம்.
குடும்ப வன்முறை குறித்து, பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் போது, விசாரணை குழுவில் குறைந்தபட்சம் ஒரு மகளிர் போலீசாராவது இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, அவ்வப்போது போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்க கூடாது. புகார் அளித்த பெண்ணின் கவுரவத்துக்கு, எந்த காரணத்தை கொண்டும் களங்கம் ஏற்படக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம்.
பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்தும்படி, மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் செப்டம்பர் 15ம் தேதி, எழுத்து பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். பெண்கள் அளிக்கும் புகார்களை, மகளிர் அதிகாரிகளே பெற வேண்டும். எப்.ஐ.ஆர்., அல்லது புகார் தொடர்பான அறிக்கைகளை, புகார்தாரர்களின் மொழியிலேயே வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகளுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.