தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுவனை சிறுமியாக மாற்றிய நாடோடி குடும்பத்துக்கு நெருக்கடி

 சிறுவனை சிறுமியாக மாற்றிய நாடோடி குடும்பத்துக்கு நெருக்கடி

 சிறுவனை சிறுமியாக மாற்றிய நாடோடி குடும்பத்துக்கு நெருக்கடி


ADDED : ஜன 15, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால்: திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால் நாடோடி குடும்பம் ஒன்று, நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கொப்பால் நகரின், கவி மடத்தில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய வந்தனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடோடி குடும்பம் ஒன்று, பிழைப்புக்காக கவி மடத்தின் திருவிழாவுக்கு வந்தனர். இங்கு சாகசங்களை செய்து காட்டினர்.

இவர்கள் குடும்பத்தின் 10 வயது சிறுமி செய்த சாகசங்கள், காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. உயரமாக கட்டப்பட்டிருந்த கயிற்றில் நடந்து அசத்தினார். இதை சிலர் தங்களின் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 14 வயது சிறார்களை, எந்த பணிக்கும் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவது, சட்டப்படி குற்றமாகும்.

அபாயமான சாகசத்தில் சிறுமி ஈடுபடுத்தப்பட்ட வீடியோவை கண்ட, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அங்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியர் காப்பகத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு படிவத்தை பெற்றோர் நிரப்பும் போது, உண்மை தெரிந்தது. சாகசங்களில் ஈடுபட்டது சிறுமி அல்ல; சிறுவன். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சிறுவர் காப்பகத்துக்கு இடம் மாற்றினர். மக்களை ஈர்க்கும் நோக்கில், சிறுவனுக்கு, சிறுமியை போன்று வேடம் போட்டு, சாகச விளையாட்டுகளில் ஈடுபடுத்தியதை, குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். ஒரு வீடியோவால், அவர்கள் தங்கள் மகளை பிரிந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:

கழைக்கூத்தாடி குடும்பத்தினர், தங்களின் 10 வயது சிறுவனுக்கு, சிறுமி வேடமிட்டு கயிற்றின் மீது நடப்பது போன்ற அபாயமான சாகசத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இது பற்றிய வீடியோ பரவியதால், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

நாங்கள் அங்கு சென்று, சிறுமியை மீட்டோம். அதன்பின் உண்மை தெரிந்தது. ஆறு வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு, கட்டாயம் கல்வியளிக்க வேண்டும். இது அரசின் கடமையாகும். சிறுமியை சொந்த ஊருக்கு அனுப்ப, ஏற்பாடு செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us