/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர்கள் பற்றி விமர்சனம்: போலீசில் இயக்கு௸நர் புகார்
/
நடிகர்கள் பற்றி விமர்சனம்: போலீசில் இயக்கு௸நர் புகார்
நடிகர்கள் பற்றி விமர்சனம்: போலீசில் இயக்கு௸நர் புகார்
நடிகர்கள் பற்றி விமர்சனம்: போலீசில் இயக்கு௸நர் புகார்
ADDED : ஜூலை 31, 2025 06:14 AM

பெங்களூரு : கன்னட திரைப்பட இயக்குநர் எஸ்.நாராயண் பெயரில், சமூக வலைதளத்தில் போலியான கணக்கு திறந்து, நட்சத்திர நடிகர்களை பற்றி அவமதிப்பாக விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கன்னட திரையுலகின் பிரபல இயக்குநர் எஸ்.நாராயண். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மர்ம நபர்கள் இவரது பெயரில், சமூக வலைதளத்தில் போலியான கணக்கு துவங்கி, சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை அவமதிப்பாக கமென்ட் செய்துள்ளனர்.
நண்பர்களின் மூலம் இதையறிந்த எஸ்.நாராயண், நேற்று மதியம் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கின் அலுவலகத்துக்கு வந்தார். அவரை சந்தித்து புகார் அளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
என் பெயரில் சோஷியல் மீடியாவில், போலியான கணக்கு திறந்து, தவறாக பயன்படுத்துகின்றனர். நடிகர்கள் புனித் ராஜ்குமார், சிவராஜ்குமார், சுதீப் குறித்து அவமதிப்பாக கமென்ட் போஸ்ட் செய்கின்றனர். ஏன் இப்படி செய்கின்றனர் என்பது புரியவில்லை.
ஐந்தாறு மாதங்களாக இது போன்று செய்துள்ளனர். இதை நண்பர்கள், என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து, நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். சோஷியல் மீடியாவால் சமுதாயத்தின் நற்பண்பு பாழாகிறது.
கர்நாடகாவில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கின்றன. யாராக இருந்தாலும் கட்டுப்பாட்டை மீறக்கூடாது. யாருடைய கவுரவத்தையும் குலைக்கக் கூடாது.
இதற்கு முன்பும், ரசிகர்களுக்கு இடையே மோதல் இருந்தது. ஆனால் அது எல்லை மீறிய து இல்லை.
திரையுலகம் வேறு பாதையில் செல்வது சரியல்ல.
இதனால், நாமும் தலைகுனிய நேரிடுகிறது. நாம் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து கொள்ள வேண்டும்.
என் பெயரில் போலியான கணக்கு துவக்கி, தவறாக பயன்படுத்துவது குறித்து, மாநில திரைப்பட வர்த்தக சபை என்ன கருத்து சொல்லும் என்பதை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.