/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.சி.பி., விழாவில் கூட்ட நெரிசல் 250 மொபைல் போன்கள் அபேஸ்
/
ஆர்.சி.பி., விழாவில் கூட்ட நெரிசல் 250 மொபைல் போன்கள் அபேஸ்
ஆர்.சி.பி., விழாவில் கூட்ட நெரிசல் 250 மொபைல் போன்கள் அபேஸ்
ஆர்.சி.பி., விழாவில் கூட்ட நெரிசல் 250 மொபைல் போன்கள் அபேஸ்
ADDED : ஜூன் 05, 2025 11:30 PM
பெங்களூரு: சின்னசாமி விளையாட்டு அரங்கம் அருகில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 250 மொபைல் போன்கள் திருடப்பட்டன.
ஐ.பி.எல்., போட்டியில் ஆர்.சி.பி., அணியினர் வெற்றி பெற்றதை கொண்டாட, பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு அரங்கில் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லட்சக்கணக்கானோர் குவிந்ததால் போலீசாராலும் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். நெரிசலில் சிக்கியவர்களை காப்பாற்ற, உடன் இருந்தவர்கள் போராடினர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு விரைந்தனர்.
இத்தகைய பதற்றமான சூழ்நிலையிலும், மொபைல் போன் திருட்டில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 250 மொபைல் போன்கள் திருடு போயுள்ளன.
இது குறித்து, கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் பலர் நேரில் வந்தும், சிலர் ஆன்லைனில் இ - லாஸ்ட் இணைய தளம் மூலமாகவும், புகார் அளித்தனர்.
அவற்றின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, ஒருவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 15 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
இவருடன் மேலும் பலருக்கு தொடர்பிருக்க வாய்ப்புள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.