கப்பன் பார்க் மெட்ரோ நிலையம் சில மணி நேரம் மூடல்
கப்பன் பார்க் மெட்ரோ நிலையம் சில மணி நேரம் மூடல்
ADDED : மே 04, 2026 10:52 PM
பெங்களூரு: மின்சார கோளாறு ஏற்பட்டதால், கப்பன் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது; பயணியர் அவதி அடைந்தனர்.
பெங்களூரு மெட்ரோவின் ஊதா நிற வழித்தடத்தில், 37 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், கப்பன் பார்க் மெட்ரோ ரயில் நிலையமும் அடங்கும்.
கப்பன் பார்க் ரயில் நிலையம் மூலம் சின்னசாமி மைதானம், ஐகோர்ட், விதான் சவுதா உள்ளிட்ட முக்கிய இடங்களை எளிதில் அடையலாம். எனவே, இங்கு ஏராளமான பயணியர் வருகின்றனர். அப்படி இருக்கையில், கப்பன் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மின்சார கோளாறு ஏற்பட்டது.
இதனால், அந்த ரயில் நிலையத்தில் அதிகாலை முதல் ரயில்கள் எதுவும் நிற்காமல் சென்றன. பயணியர் கடும் அவதிக்கு ஆளாகினர். அத்துடன், மெட்ரோ நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனிடையே, மின்சார பிரச்னை சரி செய்யப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு மீண்டும் கப்பன் பார்க் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.
