UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 07:32 PM
ஷிவமொக்கா: தாளகொப்பா கிராமத்தினர் திருமணம் உட்பட, சுப நிகழ்ச்சிகளில் ஆடம்பரமாக விருந்து கொடுப்பதற்கு, தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.
கிராமங்களில் திருமணம், பிறந்த நாள், பெயர் சூட்டல் உட்பட, பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு விருந்து கொடுப்பது வழக்கம். இதுபோல கறி விருந்து கொடுப்பது, கவுரவமாக பார்க்கப்படுகிறது. எனவே, ஏழை குடும்பத்தினரும், கடன் வாங்கி கறி விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
இதை மனதில் கொண்டு, கர்நாடகாவின் பல்வேறு கிராமங்களில், இத்தகைய விருந்துகள் ஏற்பாடு செய்ய, கிராமத்தின் தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.
தடையை மீறினால் ஒரு லட்சம் ரூபாயும், விருந்தில் பங்கேற்று உணவு சாப்பிடுவோருக்கு 50,000 ரூபாயும் அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளனர். இதை பல கிராமங்கள் பின்பற்றுகின்றனர்.
ஷிவமொக்கா மாவட்டம், சொரபா தாலுகாவின், தாளகொப்பா கிராமத்திலும், விருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். கிராமத்தின் ராமேஸ்வரா கோவிலில் நேற்று முன்தினம் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
விருந்து பெயரில் தேவையின்றி பணத்தை செலவிடுவதற்கு பதிலாக, குடும்பத்தின் வளர்ச்சிக்கும், குழந்தைகளின் படிப்புக்கு பயன்படுத்த, ஒருமனதாக முடிவு செய்தனர்.
