/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சைபர் கமாண்டன்ட ் ' மையம் பெங்களூரில் துவக்கம்
/
'சைபர் கமாண்டன்ட ் ' மையம் பெங்களூரில் துவக்கம்
ADDED : செப் 13, 2025 04:57 AM
பெங்களூரு: நாட்டிலேயே முதன்முறையாக சைபர் கமாண்டன்ட் மையம், பெங்களூரில் துவக்கப்பட்டு உள்ளது.
இன்று நமது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, சைபர் கிரைம் குற்றங்கள் தான். பொதுமக்களை சர்வ சாதாரணமாக ஏமாற்றி, சைபர் குற்றவாளிகள் பணத்தை பறிக்கின்றனர். தற்போது டிஜிட்டல் கைது என்ற முறையில், அரசியல்வாதிகள் முதல் சாதாரண மக்களை வரை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன், சைபர் கிரைம் வழக்கு ஒன்றை விசாரித்த, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, 'சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க, கர்நாடகாவில் சைபர் கமாண்டன்ட் மையம் அமைக்க வேண்டும். இந்த மையத்தை அமைத்தால், இது நாட்டின் முதல் மையமாக இருக்கும்' என கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் நேற்று சைபர் கமாண்டன்ட் மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தின் டி.ஜி.பி.,யாக பிரணவ் மொஹந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.