/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வாட்ஸாப்' மூலம் மோசடி சைபர் மோசடி கும்பல் கைது
/
'வாட்ஸாப்' மூலம் மோசடி சைபர் மோசடி கும்பல் கைது
ADDED : அக் 08, 2025 12:50 AM

பெங்களூரு : பல மாநிலங்களில் சைபர் மோசடி செய்த கும்பலை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு கெங்கேரி போலீசார் கூறியதாவது:
ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி தருவதாக கூறி, மோசடி செய்யும் சைபர் கும்பல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று முன்தினம் இரவு, ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், எட்டு சைபர் திருடர்களை கைது செய்து உள்ளோம்.
அவர்களிடமிருந்து 19 மடிக்கணினி, 40 மொபைல் போன், 11 பென் டிரைவ், 42 சிம் கார்டு, 2 ஹார்டு டிஸ்க், 10 மெமரி கார்டு, பணம் எண்ணும் இயந்திரம், ஸ்மார்ட் வாட்ச், ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் வாட்ஸாப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பல மாநிலங்களில் வசிக்கும் மக்களை தொடர்பு கொண்டு ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கூறி சைபர் மோசடி செய்து வந்து உள்ளனர். இவர்கள் 100க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி உள்ளனர். கோடிக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சைபர் கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களின் மீது ஐ.பி.சி., தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.