sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சைபர்  குற்ற வழக்குகள் 30 சதவீதம் குறைவு'

'சைபர்  குற்ற வழக்குகள் 30 சதவீதம் குறைவு'

'சைபர்  குற்ற வழக்குகள் 30 சதவீதம் குறைவு'


ADDED : மே 15, 2025 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 02:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் பதிவாகும் சைபர் குற்ற வழக்குகள் 30 சதவீதம் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறி உள்ளார்.

பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:

பெங்களூரில் சைபர் குற்ற வழக்குகள் 30 சதவீதம்; இந்திய தண்டனை சட்டத்தின்படி பதிவு செய்யும் வழக்குகள் 12 சதவீதம் குறைந்துள்ளன. இவை தவிர, சொத்து தொடர்பான குற்ற வழக்குகளும், ஓ.டி.பி., மூலம் நடக்கும் சைபர் மோசடி, டிஜிட்டல் கைது வழக்குகளும் குறைந்துள்ளன.

நகரில், 2023 முதல் மூன்று மாதங்களில் 3,588; 2024ல் 4,679; 2025ல் 2,838 சைபர் கிரைம் வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவை, கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவு.

இதற்கு மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணர்வு பிரசாரங்களே காரணம். எனவே, அரசுக்கு நன்றி. பொது இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களால், குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. மேலும், கொள்ளை வழக்குகள் 73 சதவீதமும், செயின் பறிப்பு 57 சதவீதமும் குறைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us