/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலித்துகள் ஒதுக்கி வைப்பு அதிகாரிகள் சமரச பேச்சு
/
தலித்துகள் ஒதுக்கி வைப்பு அதிகாரிகள் சமரச பேச்சு
ADDED : மே 23, 2025 05:34 AM
ராம்நகர்: திருவிழாவில் பங்கேற்கவேண்டும் என கேட்ட தால் தலித்துகளை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். இவர் களுக்கு மளிகை பொருட்களும் விற்ககூடாது என, தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவின், ஹாரோஹள்ளியின் பனவாசி கிராமத்தில் மாரம்மா கோவில் திருவிழா நடக்கஉள்ளது.
திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, பனவாசி, ஜுட்டேகவுடனவலசே மற்றும் வடேர ஹள்ளி கிராமங்களின் தலைவர்கள், சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் இருந்த உயர்சமுதாயத்தினர், இதற்கு முன் கடைபிடித்த சம்பிரதாயத்தை, இப்போதும் பின்பற்ற வேண்டும். தலித்துகள் திருவிழாவில் பங்கேற்க கூடாது என, கூறினர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தலித்துகள், 'இதுபோன்று கூறுவதுசட்டவிரோதம்.
நாங்களும் உங்களுடன்சேர்ந்து திருவிழா கொண்டாட அனுமதியளிக்க வேண்டும்' என வலியுறுத்தினர். இதனால் கோபம டைந்த உயர் சமுதாயத்தினர், தலித்துகளை திட்டினர். மனம் நொந்த அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
கூட்டம் முடிந்த பின், மூன்று கிராமங்களின் உயர்வர்க்க தலைவர்கள், பனவாசி கிராமத்தின் 12 தலித்குடும்பங்களை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.
'கிராமத்தின் கடைகளில் இவர்களுக்கு மளிகைப் பொருட்கள் தரக்கூடாது, இவர்களிடம் பண்ணைகள்,பால் கொள்முதல் செய்ய கூடாது, சுத்த குடிநீர் மையங்களில் இவர்களை அனுமதிக்க கூடாது, விவசாய பணிகளுக்கு தலித்துகளை அழைக்க கூடாது' என, தடை விதித்தனர்.
'இந்த விதிமுறைகளைமீறினால், 10,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்' என, தண்டோரா போட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஷயத்தை தலித் தலைவர்கள், சமூக நலத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அதிகாரிகள், போலீசார், தாசில்தார் கிராமத்துக்கு சென்று, இரு தரப்பினருடன் பேச்சு நடத்தி, பிரச்னையை சரி செய்தனர்.