/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காலாவதியான பூச்சிகொல்லி மருந்து விற்பனையால் பாதிப்பு
/
காலாவதியான பூச்சிகொல்லி மருந்து விற்பனையால் பாதிப்பு
காலாவதியான பூச்சிகொல்லி மருந்து விற்பனையால் பாதிப்பு
காலாவதியான பூச்சிகொல்லி மருந்து விற்பனையால் பாதிப்பு
ADDED : செப் 07, 2025 02:21 AM
கலபுரகி: கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவின் சொந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கு காலாவதியான பூச்சிகொல்லி மருந்துகள் விற்கப்படுகின்றன.
விளைச்சல்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, விவசாய தொடர்பு மையங்கள் மூலமாக, பூச்சிகொல்லி மருந்துகள் விற்கப்படுகின்றன. மாநிலத்தின் பல இடங்களில் தரமற்ற, கலப்படமான பூச்சிகொல்லி மருந்துகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கலபுரகி மாவட்டம், யட்ராமி மற்றும் ஜேவர்கி தாலுகாக்களின் சில விவசாய தொடர்பு மையங்களில், தரமற்ற பூச்சிகொல்லி மருந்துகள் விற்கப்படுகின்றன. இவை, இரண்டு ஆண்டுக்கு முன்பே காலாவதியானவை.
இவற்றை பயன்படுத்தியதால், பயிர்கள் பாழாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சர் பிரியங்க் கார்கேவின் சொந்த மாவட்டத்திலேயே, தரமற்ற பூச்சிகொல்லி மருந்தை விற்று, விவசாயிகளை ஏமாற்றும் கடைக்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி விவசாய சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
அப்ஜல்புரா தாலுகாவின் கானகாபுராவில் உள்ள 'ரேவண சித்தேஸ்வர அக்ரோ ஏஜென்சி பெர்ட்டிலைசர்' கடை உரிமையாளர் உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை, எம்.ஆர்.பி., விலையை விட அதிக விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார்; பில்லும் சரியாக கொடுப்பது இல்லை.
கட்டாயமாக பில் கேட்டால், போலியான பில் கொடுக்கிறார். இக்கடை மீது நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதன்பின் விவசாயத்துறை அதிகாரிகள், சில நாட்களுக்கு முன்பு, அக்கடையில் சோதனை நடத்தினர். கடை உரிமையாளருக்கு சம்மன் அனுப்பினர்.
இது போன்று, காலாவதியான பூச்சிகொல்லி மருந்துகளை விற்போர் மீதும், நடவடிக்கை எடுக்கும்படி விவசாய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.