/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடன ஆசிரியர் கழுத்து அறுத்து கொலை
/
நடன ஆசிரியர் கழுத்து அறுத்து கொலை
ADDED : ஆக 27, 2025 07:40 AM

ஹாவேரி : சித்ரதுர்காவை சேர்ந்த நடன ஆசிரியர், தேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஹாவேரி மாவட்டம், பைதகியின் மொட்டேபென்னுார் அருகில் சாலை ஓரத்தில் தன் பைக் அருகில் மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், விசாரணையை துவக்கினர்.
இறந்தவர் சித்ரதுர்காவை சேர்ந்த நடன ஆசிரியர் லிங்கேஷ், 25, என்பது தெரிய வந்தது. அவர் அருகில் குடிநீர் பாட்டில், சிகரெட், கத்தி ஆகியவை இருந்தன. கடந்த 24ம் தேதி ஹூப்பள்ளிக்கு பைக்கில் சென்றார். அதன் பின் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
லிங்கேஷ் குடும்பத்தினர் கூறுகையில், 'நண்பனின் பிறந்த நாளையொட்டி, பரிசு வாங்கி வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அன்றிரவு, அவரது தாய் போன் செய்து, 'சாப்பிட வா' என்று கூறியுள்ளார்.
லிங்கேசும், 'வந்துவிடுவதாக கூறி, போனை கட்' செய்துள்ளார். மீண்டும் இரவு அவரது தாய் போன் செய்தபோது, 'சுவிட்ச் ஆப்' என வந்துள்ளது. காலையில் அவர் இறந்த தகவல் தான் கிடைத்தது' என்றனர். இது விபத்து அல்ல, கொலை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மாவட்ட எஸ்.பி., யசோதா வன்டகோடி கூறியதாவது:
விபத்து நடந்த பகுதியில் லிங்கேசின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. அவர் அருகில் கத்தியும் கிடந்தது. அந்த கத்தி மூலம், அவரின் கழுத்து அறுக்கப்பட்டிருக்கலாம். லிங் கேைஷ, யாரோ கொலை செய்துள்ளதாக, அவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.