ADDED : ஆக 18, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கிய ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், கடந்த 14ம் தேதி தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
நடிகர் தர்ஷனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, தர்ஷன் முதுகு வலியால் அவதிப்படுவது தெரிந்தது. இதனால், சிறையில் உள்ள மருத்துவர், அவருக்கு முதுகு வலிக்கான சிகிச்சை அளித்து வருகிறார். அவருக்கு முதுகு வலி, ரத்த அழுத்தம், நீரழிவு ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.