ADDED : ஆக 22, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
ஹாசன்: மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, வரலாற்று பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தார்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசீபுரா தாலுகாவின், மாவினகெரே கிராமத்தின் மலை மீது, ரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஷிராவண மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், இந்த கோவிலுக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி, நேற்று காலை வருகை தந்தார்.
அவருடன் சகோதரர் ரேவண்ணா, அவர் மனைவி பவானி, மகன் சூரஜ் உட்பட பலர் வந்திருந்தனர். ரங்கநாத சுவாமிக்கு நடந்த அபிஷேகங்களில் பங்கேற்றனர். சிறப்பு பூஜைகள் செய்தனர்.
