தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குக்கே சுப்ரமணியாவில் சிறப்பு பரிகாரங்கள் ரத்து

 குக்கே சுப்ரமணியாவில் சிறப்பு பரிகாரங்கள் ரத்து

 குக்கே சுப்ரமணியாவில் சிறப்பு பரிகாரங்கள் ரத்து


ADDED : ஆக 22, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: குக்கே சுப்ரமணியா கோவிலில் -இன்றும், நாளையும் சிறப்பு பரிகார பூஜை செய்வது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலில் நாகப்பிரதிஷ்டை உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், அதிகளவில் பரிகாரங்கள் செய்கின்றனர்.

ஏகாதசியையொட்டி சர்ப்ப சமஸ்காரம், நாக பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு பரிகாரங்கள் இன்றும், நாளையும் கோவிலில் நடைபெறாது. ஏகாதசி விரத விதிகளின்படி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படாது என்பதால், பரிகாரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், வழக்கமாக கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் வழக்கம் போல இன்றும், நாளையும் நடக்கும். இதில், எவ்வித மாறுதலும் இல்லை. இதை வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கருதி, வேறு நாட்களில் சிறப்பு பரிகாரங்களை செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டு கொண்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us