/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறையில் தர்ஷனுக்கு சலுகை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
/
சிறையில் தர்ஷனுக்கு சலுகை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சிறையில் தர்ஷனுக்கு சலுகை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
சிறையில் தர்ஷனுக்கு சலுகை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : அக் 11, 2025 05:16 AM

பெங்களூரு: நடிகர் தர்ஷனுக்கு சிறையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்து, 18ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவிட்டது.
ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் பாய், தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என, சிட்டி சிவில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
அப்போது, 'தர்ஷன் தங்கியுள்ள அறையை பெங்களூரு நகர சட்ட சேவைகள் ஆணையத்தின் செயலர் சென்று பார்வையிட வேண்டும். அடிப்படை வசதிகள் ஒழுங்காக செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வரும் 18ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.