தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நடிகர் தன்வீர் கவுடா மீது தர்ஷன் மனைவி வழக்கு

நடிகர் தன்வீர் கவுடா மீது தர்ஷன் மனைவி வழக்கு

நடிகர் தன்வீர் கவுடா மீது தர்ஷன் மனைவி வழக்கு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடிகர் தன்வீர் கவுடா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி, நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் மனைவி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் சிறையில் இருக்கும் நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக, தர்ஷன் மனைவி விஜயலட்சுமியிடம் இருந்து 10 கோடி ரூபாய் வரை, நடிகர் தன்வீர் கவுடா பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜயலட்சுமிக்கும், தன்வீருக்கும் இடையே அவ்வப்போது வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது இருவரும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக குற்றஞ்சாட்டி வந்தனர். இதேவேளையில் கடந்த மாதம், தன்வீர் வீட்டுக்கு விஜயலட்சுமி, அவரது மேலாளர் உட்பட நான்கு பேர் சென்று ரகளையில் ஈடுபட்டதாக, தன்வீர் தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதற்கு பதிலாக விஜயலட்சுமியின் மேலாளர் நாகராஜ், ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் தன்வீர் மீது புகார் அளித்து உள்ளார். அத்துடன், ஆடியோ பதிவையும் சமர்ப்பித்து உள்ளார். அதில், தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி பற்றி தன்வீர் திட்டியது குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தன்வீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், அக்., 30ம் தேதி விஜயலட்சுமி, பெங்களூரு நகரின் 37வது சி.சி.எச்., நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார் ஒன்றை விஜயலட்சுமி தாக்கல் செய்தார். அதில், ‘தன்வீர் தனக்கு எதிராக அவதுாறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவ., 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us