/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்
/
ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்
ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்
ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்
ADDED : டிச 25, 2025 06:46 AM

பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களாக உள்ள சுதீப், தர்ஷன் இடையில் ஏழாம் பொருத்தமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தார்வாடில் நடந்த நிகழ்ச்சியில் சுதீப் பேசுகையில், 'நாம் போருக்கு தயாராக வேண்டிய நேரம் வந்து விட்டது' என்றார்.
தர்ஷனையும், அவரது ரசிகர்களையும் குறி வைத்து சுதீப் பேசியதாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவின. சுதீப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தர்ஷன் மனைவி விஜயலட்சுமி கூறுகையில், 'தர்ஷன் சிறையில் இருப்பதால், சிலர் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். பெங்களூரில் அவர் இருந்தால், சிலர் இருக்கும் இடமே தெரியாது' என்றார்.
இதையடுத்து சுதீப் ரசிகர்கள், விஜயலட்சுமிக்கு எதிராக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். சிலர் ஆபாசமாகவும் கமென்ட் செய்தனர். இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம், விஜயலட்சுமி நேற்று புகார் அளித்தார்.