தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரு – மைசூரு இடையே தசரா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பெங்களூரு – மைசூரு இடையே தசரா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பெங்களூரு – மைசூரு இடையே தசரா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


UPDATED : அக் 07, 2026 12:08 AM

ADDED : அக் 07, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:08 AM ADDED : அக் 07, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: ‘பயணியர் வசதிக்காக தசராவுக்கு, பெங்களூரில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என, தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

ரயில் எண் 06285 கே.எஸ்.ஆர்., பெங்களூரு – அசோகபுரம் முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து அக்., 19, 20, 21ம் தேதிகளில் மதியம் 12:15 மணிக்கு புறபட்டு 3:40 மணிக்கு மைசூரு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06286 அசோகபுரம் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், அசோகபுரத்தில் இருந்து அக்., 19, 20, 21ம் தேதிகளில் மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு 8:00 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

 எண் 06287: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – மைசூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து அக்., 16, 17, 18, 19, 20, 21ம் தேதிகளில் இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12:20 மணிக்கு மைசூரு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06288: மைசூரு – கே.எஸ்.ஆர்., பெங்களூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், மைசூரில் இருந்து அக்., 17, 18, 19, 20, 21ம் தேதிகளில் அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட்டு, 3:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

 எண் 06297: மைசூரு – கே.எஸ்.ஆர்., பெங்களூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், மைசூரில் இருந்து அக்., 16, 17, 18, 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2:50 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

மறுமார்க்கத்தில் எண் 06298: கே.எஸ்.ஆர்., பெங்களூரு – மைசூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில் பெங்களூரில் இருந்து அக்., 17 , 18, 19, 20, 21, 22ம் தேதிகளில் அதிகாலை 3:15 மணிக்கு புறப்பட்டு, 6:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

 எண் 06293 மைசூரு – சாம்ராஜ் நகர் முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், மைசூரில் இருந்து அக்., 21ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, 11:20 மணிக்கு சாம்ராஜ் நகர் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் எண் 06294: சாம்ராஜ் நகர் – மைசூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், சாம்ராஜ் நகரில் இருந்து அக்., 21ம் தேதி இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1:50 மணிக்கு மைசூரு சென்றடையும்.

 எண் 06289: மைசூரு – சாம்ராஜ் நகர் முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், மைசூரில் இருந்து அக்., 21ம் தேதி அதிகாலை 12:10 மணிக்கு புறப்பட்டு, 2:00 மணிக்கு சாம்ராஜ் நகர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எண் – 06290: சாம்ராஜ் நகர் – மைசூரு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில், சாம்ராஜ் நகரில் இருந்து அக்., 21ம் தேதி காலை 2:30 மணிக்கு புறப்பட்டு 4:15 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us