முதல்வர் மீது வழக்குப்பதிவு சி.டி.ரவி வலியுறுத்தல்
முதல்வர் மீது வழக்குப்பதிவு சி.டி.ரவி வலியுறுத்தல்
ADDED : அக் 07, 2026 12:06 AM
பெங்களூரு: எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில், பா.ஜ., மீது அவதுாறு பரப்பும் முதல்வர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என பா.ஜ., – எம்.எல்.சி., சி.டி.ரவி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியலிலிருந்து சிறுபான்மையின சமூகத்தினரை சேர்ந்த, 70 லட்சம் பேரை நீக்க முயன்றதாக, பா.ஜ., மீது முதல்வர் சிவகுமார் பொய் குற்றம்சாட்டுகிறார். ஆனால், வாக்காளர் பட்டியலிலிருந்து, 91,278 பேரை மட்டுமே நீக்க கோரி படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையமே தெளிவுபடுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் பா.ஜ., மீது அவதுாறு பரப்பும் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருந்தால், சித்தராமையா முதல்வராகியிருக்க முடியாது. தேர்தல் ஆணையம் அனைத்து புகார்களையும் விசாரிக்கட்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். இதில், தவறில்லை.
ஆனால், பா.ஜ.,வினர் மீது போலீசார் பொய் புகார் பதிவு செய்வது சரியல்ல. வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர்கள் பல முறை வந்து உள்ளன. இதை, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
