/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2வது திருமணம் செய்த தந்தையை அடித்த மகள்கள், மகன் மீது புகார்
/
2வது திருமணம் செய்த தந்தையை அடித்த மகள்கள், மகன் மீது புகார்
2வது திருமணம் செய்த தந்தையை அடித்த மகள்கள், மகன் மீது புகார்
2வது திருமணம் செய்த தந்தையை அடித்த மகள்கள், மகன் மீது புகார்
ADDED : டிச 22, 2025 05:26 AM

ஹாசன்: வயதான காலத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தந்தையை, இரண்டு மகள்களும், ஒரு மகனும் அடித்தனர். இவர்கள் மீது போலீஸ் நிலையத்தில், புகார் பதிவாகியுள்ளது.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவில் வசிப்பவர் ராஜண்ணா, 67. இவரது மனைவி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். இவரது இரண்டு மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் தங்களின் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
வயதான காலத்தில் தனக்கு துணை வேண்டும் என, நினைத்து இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு மகள்களும், மகனும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாமல், கீதா, 58, என்பவரை இம்மாதம் 17ம் தேதி, ராஜண்ணா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கீதா ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்தவர்.
தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுடன், மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்ததால், மகள்கள், மகனுக்கு பிடிக்கவில்லை. சொத்துகளை தங்கள் பெயருக்கு எழுதி வைக்கும்படி கேட்டு, நேற்று முன்தினம் தந்தையை அடித்தனர்.
இது குறித்து, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், ராஜண்ணா புகார் செய்தார். 'என் இரண்டு மகள்கள், ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சொத்துகளையும் கொடுத்துள்ளேன். என்னிடம் தற்போது ஒரு வீடு மட்டுமே உள்ளது. இதையும் தங்கள் பெயருக்கு எழுதி தரும்படி, பிள்ளைகள் அடிக்கின்றனர். கடைசி காலத்தில் எனக்கு உதவியாக இருக்கட்டும் என்பதால், இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என கோரியுள்ளார்.
ஆனால், போலீசார் விசாரணை நடத்தவில்லை. தாமதம் செய்வதாக ராஜண்ணா குற்றம்சாட்டியுள்ளார்.

