தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே இந்திரா பிரியதர்ஷினி மிருகக்காட்சி சாலை இடமாற்றம்?

 தாவணகெரே இந்திரா பிரியதர்ஷினி மிருகக்காட்சி சாலை இடமாற்றம்?

 தாவணகெரே இந்திரா பிரியதர்ஷினி மிருகக்காட்சி சாலை இடமாற்றம்?


ADDED : ஜன 27, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: இந்திரா பிரியதர்ஷினி மினி மிருகக்காட்சி சாலையை, வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

தாவணகெரே மாவட்டம், ஆனகோடுவில் இந்திரா பிரியதர்ஷினி மினி மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நான்கு புள்ளி மான்கள் இறந்தன. இதையடுத்து, பூங்காவிற்கு பொது மக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இறந்த மான்களின் உறுப்புகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. அதில், மான்கள், 'ரத்தக்கசிவு செப்டிசீமியா'வால் உயிரிழந்தது தெ ரிய வந்தது.

இந்திரா பிரியதர்ஷி னி மினி மிருகக்காட்சி சாலையில், இரண்டு இலக்கங்களுக்கு மேல் விலங்குகள் இல்லை. தற்போது, புள்ளி மான்கள், பறவைகள், கரடிகள், மயில்கள், கிளிகள் மட்டுமே உள்ளன. இதனால், பார்வையாளர்கள் வருகையும் குறைவாகவே உள்ளது.

இந் த பூங்காவுக்கு மாயகொண்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., - கே.எஸ்.பசவந்தப்பா திடீர் வருகை தந்தார். பூங்கா பராமரிக்கப்படாமல் இருப்பதையும், விலங்குகள் இல்லாமல் இருப்பதையும் பார்த்து வருத்தம் அடைந்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. போதுமான அளவு விலங்குகளும் இல்லை. எனவே, பூங்காவை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் எடுத்துரைப்பேன். அறிக்கை தயாரித்து வன அமைச் சர் ஈஸ்வர் கன்ட்ரேவிடம் சமர்ப்பிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us