/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாவணகெரே மினி பூங்காவில் நான்கு புள்ளி மான்கள் இறப்பு பார்வையாளர்களுக்கு தடை விதிப்பு
/
தாவணகெரே மினி பூங்காவில் நான்கு புள்ளி மான்கள் இறப்பு பார்வையாளர்களுக்கு தடை விதிப்பு
தாவணகெரே மினி பூங்காவில் நான்கு புள்ளி மான்கள் இறப்பு பார்வையாளர்களுக்கு தடை விதிப்பு
தாவணகெரே மினி பூங்காவில் நான்கு புள்ளி மான்கள் இறப்பு பார்வையாளர்களுக்கு தடை விதிப்பு
ADDED : ஜன 20, 2026 06:24 AM
தாவணகெரே: தாவணகெரேயில் உள்ள உயிரியல் பூங்காவில், நான்கு புள்ளி மான்கள் இறந்ததால், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெலகாவி கித்துார் ராணி சென்னம்மா மினி மிருகக்காட்சி சாலையில் இருந்த, 38 கலை மான்களில், 31 மான்கள், 'ரத்தகசிவு செப்டிசீமியா' நோயால் கடந்த ஆண்டு உயிரிழந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தாவணகெரே மாவட்டம் ஆனகோடுவில் உள்ள இந்திரா பிரியதர்ஷினி மினி மிருகக்காட்சி பூங்காவில், ஆண் புள்ளி மான்கள் 58, பெண் மான்கள் 94, குட்டிகள், 18 என மொத்தம், 170 புள்ளி மான்கள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
கடந்த, 16ம் தேதி, இங்குள்ள புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அன்று முதல் நேற்று முன்தினம் வரை நான்கு புள்ளி மான்கள் இறந்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உயிரியல் பூங்காவுக்கு வரும் பொது மக்களுக்கு தற்காலிக தடை விதித்து, சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த மான்கள், ரத்தக்கசிவு செப்டிசிமியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதையடுத்து, பெங்களூரு மற்றும் பெலகாவியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இறந்த மான்களின் உடல் உறுப்புகள், ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., பசவந்தப்பா, பூங்காவுக்கு சென்று அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர், அவர் கூறியதாவது:
கடந்த மூன்று நாட்களில் நான்கு புள்ளி மான்கள் இறந்துள்ளன. நோயால் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மானுக்கு வழங்கிய உணவுகள் சரியில்லை. அது கூட காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

