/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை மிரட்டல் வருகிறது காங்., - எம்.எல்.ஏ., அலறல்
/
கொலை மிரட்டல் வருகிறது காங்., - எம்.எல்.ஏ., அலறல்
ADDED : ஆக 04, 2025 05:08 AM

மாண்டியா: ''நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, எனக்கு கொலை மிரட்டல் வருகிறது,'' என்று, மலவள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி பகீர் தகவல் கூறி உள்ளார்.
மாண்டியா மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக, விவசாய துறை அமைச்சரும், மாண்டியா பொறுப்பு அமைச்சருமான செலுவராயசாமி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற மலவள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திரசாமி தனக்கு சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக பகீர் தகவல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
என் தொகுதியிலான மலவள்ளியில் 2,500 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக சட்டசபையில் குரல் எழுப்பினேன். நிலத்தை மீட்க அரசு விசாரணை குழு அமைத்தது.
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 800 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. இது நில திருடர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு எதிராக சதி செய்வதுடன், கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்றும் எனக்கு தெரியும்.
நேரம் வரும் போது என்னை மிரட்டியவர்கள், மிரட்ட கூறியவர்கள் பற்றி ஆதாரத்துடன் கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நரேந்திரசாமி எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர். மாண்டியாவில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவும் உள்ளார்.
கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது, மாண்டியா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.