/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர், துணை முதல்வருக்கு இ - மெயிலில் கொலை மிரட்டல்
/
முதல்வர், துணை முதல்வருக்கு இ - மெயிலில் கொலை மிரட்டல்
முதல்வர், துணை முதல்வருக்கு இ - மெயிலில் கொலை மிரட்டல்
முதல்வர், துணை முதல்வருக்கு இ - மெயிலில் கொலை மிரட்டல்
ADDED : ஏப் 24, 2025 07:19 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருக்கு, 'இ - மெயில்' வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை சிந்தார் ரஜபூத் என்பவரின் பெயரில் 'இ - மெயில்' வந்தது.
அதில் அவர், 'முதல்வரையும், துணை முதல்வரையும் கொலை செய்து, பிரிஜ் மற்றும் டிராலி பேக்கில் உடல்களை நிரப்புவேன். ராமபுராவின் பிரபாகருக்கு 1 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். ஆனால், அவர் இதுவரை பணத்தைத் திருப்பி தரவில்லை.
அவரிடம் என் பணத்தைத் திருப்பித் தரும்படி கூறுங்கள். பிரபாகர், தன் மைத்துனி மற்றும் பெற்றோரின் வீட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார். பிரபாகரையும் கொலை செய்வேன்' என கூறியுள்ளார்.
கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததை போன்ற இ - மெயில், துணை முதல்வர், உள்துறை அமைச்சர், நகர போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராமபுராவின் பிரபாகர் யார் என்பது, தற்போதைக்கு தெரியவில்லை.
'விசாரணைக்கு பின்னரே, முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மிரட்டல் விடுத்தது யார் என்பது தெரிய வரும்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.