/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாய்லர் வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு
/
பாய்லர் வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு
பாய்லர் வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு
பாய்லர் வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை எட்டாக அதிகரிப்பு
ADDED : ஜன 09, 2026 06:30 AM
பெலகாவி: சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா தாலுகாவின், மரகும்பி கிராமம் அருகே, 'இனாம்தார் ஷுகர்ஸ்' என்ற சர்க்கரை ஆலை உள்ளது. இது, முன்னாள் அமைச்சர் இனாம்தாரின் மகன் விக்ரம் இனாம்தாருக்கு சொந்தமானது.
ஜனவரி, 7ம் தேதியன்று, மதியம் 2:00 மணியளவில், சர்க்கரை ஆலையின் நம்பர் 1 பிரிவில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராமல் பாய்லர் வெடித்தது. இதில், பைலஹொங்களாவின் நேசரகி கிராமத்தின் தீபக் முனவள்ளி, 31, கானாபுராவின் சிக்கமுனவள்ளி கிராமத்தின் சுதர்ஷன் பனோஷி, 25, ஜமகன்டியின் அக்ஷய் ஜோபடே, 45, ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி கோகாக் தாலுகாவின் கொடசினமல்கி கிராமத்தின் பரத் பசப்பா சாரவாடி, 27, பைலஹொங்களா தாலுகாவின் அளவள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் மடிவாளப்பா காஜகார், 28, பாகல்கோட்டின், மரேகுத்தி கிராமத்தின் குருநாத பீரப்பா தம்மண்ணவரா, 38, அதானி தாலுகாவின், ஹூலிகட்டே கிராமத்தின் மஞ்சுநாத் கோபால் தேர்தாள், 31, ராகவேந்திரா கிரியால், 35, ஆகிய ஐந்து பேர் நேற்று உயிரிழந்தனர்.
சர்க்கரை ஆலையின் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு வசதி செய்யாததே அசம்பாவிதத்துக்கு காரணம் என, சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முரகோடா போலீசார் விசாரிக்கின்றனர்.

