/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடங்களுக்கு நிரந்தர பட்டா!
/
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடங்களுக்கு நிரந்தர பட்டா!
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடங்களுக்கு நிரந்தர பட்டா!
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடங்களுக்கு நிரந்தர பட்டா!
ADDED : ஜன 09, 2026 06:31 AM

கர்நாடக அரசால் முறைப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், இதர கட்டடங்கள் மற்றும் வீட்டு மனைகளுக்கு, 'ஏ பட்டா'வும்; முறைப்படுத்தப்படாத இடங்களில் உள்ள சொத்துக்களுக்கு, 'பி பட்டா'வும் வழங்கப்படும் நடைமுறை பல ஆண்டுகளாக அமலில் இருந்தது. 'ஏ பட்டா' வைத்திருப்போருக்கு அரசின் சலுகைகள் மற்றும் வங்கி கடன் எளிதில் கிடைத்த நிலையில், 'பி பட்டா' வைத்திருப்போருக்கு சலுகைகள் கிடைப்பதிலும், வங்கி கடன் பெறுவதிலும் நிறைய சிக்கல் இருந்தன.
இந்நிலையில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, பி பட்டா சொத்துக்களை, ஏ பட்டா சொத்துக்களாக மாற்றும் திட்டத்தை, துணை முதல்வர் சிவகுமார், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டு வந்தார்.
இத்திட்டத்தின் கீழ் பி பட்டா சொத்துக்களை, ஏ பட்டா சொத்துக்களாக உரிமையாளர் மாற்றி வருகின்றனர். சொத்துக்கள் அடிப்படையில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
கட்டண அறிவிப்பு இந்நிலையில், மாநிலம் முழுதும் பி பட்டா சொத்துக்களை, ஏ பட்டா சொத்துக்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பின், மாநகராட்சி, நகராட்சி, பட்டண பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்டு வரும், பத்து லட்சம் சொத்துக்களுக்கு பி பட்டாவில் இருந்து ஏ பட்டா வழங்க, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏ பட்டா இருக்கும் நிலங்களை விற்பதில் பெரிய அளவில் சிரமம் இருக்காது. கர்நாடகாவில் தற்போது சொத்து மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், பி பட்டா வைத்திருப்போருக்கு, ஏ பட்டா வழங்குவது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. சொத்துக்களை மாற்றுவதற்கான கட்டணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. வரும் நாட்களில் கட்டண அறிவிப்பு வெளியாகும்.
சுத்தமான குடிநீர் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட மேலும் சில முக்கிய முடிவுகள் விபரம்:
பரப்பன அக்ரஹாரா உட்பட மாநிலத்தின் பல சிறைகளில் உள்ள, 33 ஆயுள் தண்டனை கைதிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட உள்ளனர்.
பெங்களூரில் உள்ள கர்நாடக சோப் அன்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு, 17.70 கோடி ரூபாய் செலவில் சோப்பு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்படும்.
கோலார் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில், 24.96 கோடி ரூபாய் செலவில் கழிவு அலகு அமைக்கப்படும்.
பெங்களூரு ஜெயநகர் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் 2 வது கட்டுமான பணிகளுக்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிக்கபல்லாபூரில் உள்ள நந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய மருத்துவமனை மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான இயந்திரங்கள், தளவாடங்கள் வாங்க 40 கோடி ரூபாயில் வாங்கப்படும்.
* சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 166 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக பராமரிப்பு பணிகளை செயல்படுத்த 33.04 கோடி ரூபாய் வழங்கப்படும்.
பெங்களூரு, துமகூரு, ராய்ச்சூரில் காங்கிரஸ் பவன் கட்ட நிலம் ஒதுக்கப்படும்.
கருணை வேலை கடந்த ஆண்டு நவம்பர், 25ம் தேதி கார் விபத்தில் மரணம் அடைந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஹாந்தேஷ் பீலகி மகள் சைதன்யாவுக்கு, கருணை அடிப்படையில் குரூப் சி பிரிவு வேலை வழங்கப்படும்.
கலபுரகியில், 50 கோடி ரூபாய் செலவில் மெகா பால் பண்ணை அமைக்கப்படும்.
மத்திய அரசின் விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தப்படும்
மாநிலத்தின் 31 மாவட்டங்கள், ஐந்து போலீஸ் கமிஷனர் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்துறையுடன் இணைந்து, பெண்கள் பாதுகாப்புக்காக அக்கா படை திட்டத்தை செயல்படுத்தப்படும்.
மைசூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகளை ஆதரிப்பதற்காக, மைசூரில் பட்டு கூடு சந்தை, 20 கோடி ரூபாயில் செலவில் நிறுவப்படும்.
இந்த விபரங்களை சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

