/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு - துாத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு
/
மைசூரு - துாத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு
மைசூரு - துாத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு
மைசூரு - துாத்துக்குடி பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : ஜன 09, 2026 06:31 AM

மைசூரு: 'பொங்கலை ஒட்டி பயணியர் வசதிக்காக, மைசூரில் இருந்து துாத்துக்குடிக்கு இன்றும், வரும், 13ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன' என்று தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரயில் எண் 06283: மைசூரிலிருந்து துாத்துக்குடிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இன்றும், 13ம் தேதியும் மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 11:00 மணிக்கு துாத்துக்குடி சென்றடையும். இந்த ரயில், கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு இரவு, 9:15 மணிக்கு வந்தடையும்.
மறு மார்க்கத்தில் எண் 06284: துாத்துக்குடி - மைசூரு சிறப்பு விரைவு ரயில், துாத்துக்குடியில் இருந்து வரும், 10ம் தேதியும், 14ம் தேதியும் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை, 7:45 மணிக்கு மைசூரு வந்தடையும். இந்த ரயில், கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு அதிகாலை, 5:10 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில், மாண்டியா, மத்துார், சென்னபட்டணா, ராம்நகர், கெங்கேரி, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, பெங்களூரு கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, துாத்துக்குடி மேலுாரில் நின்று செல்லும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

