sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஐந்து மாநில தேர்தல் முடிந்த பின் முதல்வர் மாற்றம் குறித்து முடிவு '

 'ஐந்து மாநில தேர்தல் முடிந்த பின் முதல்வர் மாற்றம் குறித்து முடிவு '

 'ஐந்து மாநில தேர்தல் முடிந்த பின் முதல்வர் மாற்றம் குறித்து முடிவு '


ADDED : மார் 03, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் முடிந்த பின், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து, காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும்,'' என, மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறி உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

என் பிறந்தநாளை ஒட்டி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யும்படி, சக எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொண்டதால் விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று வாழ்த்து கூறினர். இதில் என்ன தவறு உள்ளது. நாங்கள் கோஷ்டி அரசியல் செய்யவில்லை.

முதல்வர் மாற்றம் விவகாரத்தில் நிலவும் குழப்பத்திற்கு, கட்சி மேலிடம் முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். இவ்விஷயத்தை எளிதாக விட்டால், கட்சிக்கு சேதாரம் ஏற்படலாம். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்த பின், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்.

பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலே இல்லையா. விஜயேந்திரா, அசோக், ரமேஷ் ஜார்கிஹோளி என, தனி அணிகள் உள்ளன. எல்லா கட்சியிலும் குறைகள் இருக்கும். பிரச்னையை தீர்த்து வைப்பது மேலிடம்.

ஐந்து வாக்குறுதி திட்டங்களால் அரசுக்கு சுமை ஏற்படுகிறது. பணக்காரர்கள் கூட வாக்குறுதி திட்ட பலன்களை அனுபவிக்கின்றனர். இதனால், திட்டங்களில் மாற்றம் செய்தால் நல்லது. தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே, திட்டங்களின் பலன் கிடைக்க வேண்டும். இதில் மிச்சமாகும் பணத்தை, வளர்ச்சி பணிகளுக்கு அரசு பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த, 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் மட்டுமே வென்றது. ஐந்து வாக்குறுதி திட்டங்களை கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனால், திட்டங்களை நிறுத்துங்கள் என்று, பாலகிருஷ்ணா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us