தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த முடிவு

 குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த முடிவு

 குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த முடிவு


ADDED : ஆக 23, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: குப்பை அள்ளும் வாகனங்களை கண்காணிக்க, அந்த வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்த, சென்ட்ரல் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

பெங்களூரில் வாகனங்கள் வீடு தேடி வந்து தினமும் குப்பையை சேகரிக்கின்றன. இந்த வாகனங்கள் தினமும் சரியான நேரத்திற்கு வருவதில்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து, வீடுகளுக்கு வந்து குப்பை எடுத்து செல்லும் டிப்பர் ஆட்டோக்களை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்த, பெங்., சென்ட்ரல் மாநகராட்சி திட்டமிட்டது. முதல் கட்டமாக, 138 டிப்பர் ஆட்டோக்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட உள்ளது.

இத்திட்டம், முதற்கட்டமாக, சாந்திநகர் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வாகனங்களை கண்காணிக்கவும், வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் முறையாக சென்று குப்பை சேகரிக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் முடியும்.

இதில், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது. இத்திட்டம், வெற்றியடைந்தால் மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us