தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உணவக பில்லில் உருவ அமைப்பு பற்றி குறிப்பிட்டதால் வாடிக்கையாளர் அதிருப்தி

 உணவக பில்லில் உருவ அமைப்பு பற்றி குறிப்பிட்டதால் வாடிக்கையாளர் அதிருப்தி

 உணவக பில்லில் உருவ அமைப்பு பற்றி குறிப்பிட்டதால் வாடிக்கையாளர் அதிருப்தி


ADDED : ஆக 23, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோரமங்களா: உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர் உணவருந்திய பில்லில், அவரது பெயருக்கு பதிலாக, உருவ அடையாளத்தை குறிப்பிட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின், கோரமங்களாவில், 'சப்கோ தி கிராப்டரி' என்ற உணவகம் உள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதியன்று, இந்த கபேவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டார். அதற்கான பில் தொகையை செலுத்தினார்.

அதன் பின் ரசீதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அதில் வாடிக்கையாளர் விபரம் குறிப்பிட வேண்டிய இடத்தில், அவரது பெயருக்கு பதிலாக, 'ஓரளவு தடிமனாக இருப்பர், கருப்பு சட்டை அணிந்துள்ளார்' என, குறிப்பிட்டிருந்தனர்.

இதை பார்த்து, அதிருப்தி அடைந்த அவர் கூறியதாவது:

சப்கோ தி கிராப்டரி உணவகத்தில், உணவுக்கான பில்லில் என் பெயரை பயன்படுத்தவில்லை. 12வது டேபிளில் உள்ள நபர் என்றும் குறிப்பிடவில்லை. ஆனால் என் உடல் உருவத்தை, நான் அணிந்துள்ள சட்டையின் நிறத்தை குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு வாடிக்கையாளரை தடிமன் என, குறிப்பிடுவது தவறு. உடல் வடிவமைப்பில், ஆண், பெண் என்ற அடிப்படையில், பாகுபாடு பார்க்க கூடாது.

பெண் ஒருவரின் உடலை பற்றி, இதே போன்று ரசீதில் குறிப்பிட்டிருந்தால், அதை யாரும் வேடிக்கையாக கருத மாட்டார்கள். ஆண்களையும் உடல் வடிவத்தை பற்றி கூறி, அவமதிப்பது ஏற்புடையது அல்ல.

நான் அவ்வளவு தடிமன் அல்ல. 6 அடி உயரம் இருக்கிறேன். இது குறித்து, ஊழியரிடம் கேள்வி எழுப்பிய போது, சரியான பதில் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. பலரும், அந்த உணவக ஊழியர்களை கண்டித்துள்ளனர்.

சர்ச்சை அதிகரித்த பின், விஷயம் கபே நிர்வாகத்தின் கவனத்துக்கும் சென்றது. வாடிக்கையாளரிடம், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர்.

'எங்கள் உணவக ஊழியர், உள்நோக்கத்துடன் இது போன்று குறிப்பிட்டுள்ளார். இதை எங்கள் நிறுவனம் ஏற்காது. வாடிக்கையாளரின் பெயருக்கு பதிலாக, உருவ அமைப்பை குறிப்பிட்டது தவறு.

'இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம், எங்கள் நிறுவனம் மன்னிப்பு கேட்கிறது. அவரை தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்கவும் முயற்சிக்கிறது' என கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us