தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு

 துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு

 துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு


ADDED : ஆக 13, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரை துாய்மையாக வைத்திருப்பதில், முக்கிய பங்கு வகிக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த போனஸ் வழங்க, ஜி.பி.ஏ., முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு நகரில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டாக போனஸ் வழங்கப்படவில்லை. போனஸ் வழங்கும்படி ஜி.பி.ஏ., தலைமை கமிஷனரிடம், தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

துப்புரவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற, தலைமை கமிஷனர் முன் வந்துள்ளார். அம்பேத்கர் ஜெயந்தி, துப்புரவு பணியாளர்கள் தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் இறுதியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய, ஜி.பி.ஏ., திட்டமிட்டுள்ளது.

ஜி.பி.ஏ., தலைமை அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் சிவகுமார் பங்கேற்பார். அப்போது, போனஸ் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

பெங்களூரை துாய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்கும் துப்புரவு பணியாளர்களின் நலனுக்காக, ஜி.பி.ஏ., இம்முடிவை எடுத்துள்ளது. இதனால் ஜி.பி.ஏ.,வில் பணியாற்றும், 12,600 நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 1,500 பணியாளர்கள் பயன் அடைவர். இதற்காக, 30 கோடி ரூபாய் செலவிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us