வாக்காளர் பட்டியலில் பெயர் பிரகாஷ் ராஜ் கூறியது பொய்
வாக்காளர் பட்டியலில் பெயர் பிரகாஷ் ராஜ் கூறியது பொய்
ADDED : ஆக 12, 2026 12:04 AM
பெங்களூரு: ''வாக்காளர் பட்டியலில் தன் பெயர் நீக்கப்பட்டதாக, நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டியது பொய்,'' என, பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனரும், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியமான ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடிகர் பிரகாஷ் ராஜ், வெளியிட்டிருந்த வீடியோவில், 'நல்ல நகைச்சுவை. ஆட்டம் ஆரம்பம்' என்று கூறி, பெங்களூரில் வாக்காளர் பெயர் பட்டியலில் எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் நேற்று மாலை 5:30 மணிக்கு பிரகாஷ் ராஜ் குடியிருந்த வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, 'அவர் இந்த வீட்டை காலி செய்து நான்கு ஆண்டுகளாகிறது' என்று குறிப்பிட்டனர்.
இ தையடுத்து, அவர் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார் என அதிகாரிகள் குறித்து கொண்டனர்.
பின், பிரகாஷ் ராஜிடம் நேரடியாக பேசிய தேர்தல் அதிகாரி, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்ததை உறுதிபடுத்தி கொண்ட கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெகதீஷ், 'பிரகாஷ் ராஜ் கூறியது உண்மையல்ல' என்று தெரிவித்துள்ளார்.
