தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லிங்கராஜபுரம் மாசுபட்ட குடிநீர் பழைய பைப்பை மாற்ற முடிவு

 லிங்கராஜபுரம் மாசுபட்ட குடிநீர் பழைய பைப்பை மாற்ற முடிவு

 லிங்கராஜபுரம் மாசுபட்ட குடிநீர் பழைய பைப்பை மாற்ற முடிவு


ADDED : ஜன 06, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 12:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லிங்கராஜபுரம்: லிங்கராஜபுரத்தில் 40 ஆண்டுகள் பழமையான பைப்பை பயன்படுத்தியதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது தெரிய வந்து உள்ளது. மேலும், பைப் லைனை முழுதும் மாற்ற குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

மத்திய பிரதேசம் இந்துாரில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் 10க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், பெங்களூரு லிங்கராஜபுரம் கே.எஸ்.எப்.சி., லே - அவுட்டில் சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன. இது, தொடர்பாக சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பின.

இந்த தண்ணீரை பருகியவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகள், அந்த பகுதிக்கு செல்லும் பைப்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

எனவே, தண்ணீர் லாரிகள் மூலம், குடிநீர் சேவையை குடிநீர் வாரியம் வழங்கியது. இதையடுத்து, நேற்று 'ரோபாடிக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

பைப் 40 ஆண்டுகள் பழமையானதால், அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் மாசுபாடு அடைந்து உள்ளது. எனவே, பழைய பைப்பை முழுதும் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

பைப் மாற்றம் செய்யப்பட்டவுடன் குடிநீர் வினியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் முயற்சியை பெங்., குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் பாராட்டி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us