தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 7 நிமிட இடைவெளியில் ரயில் இயக்க முடிவு

 7 நிமிட இடைவெளியில் ரயில் இயக்க முடிவு

 7 நிமிட இடைவெளியில் ரயில் இயக்க முடிவு


ADDED : ஜூலை 26, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் அடுத்த வாரம் புதிய ரயில் இயக்கப்படுகிறது.

ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில், கடந்த ஆண்டு ரயில் சேவைகள் துவங்கின. ரயில் சேவை துவங்கிய போது வெறும் மூன்று ரயி ல்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 25 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, 12 ரயில்கள் இவ்வாறு இயங்கப்படுகின்றன.

இந்நிலையில், 13வது ரயிலும் விரைவில் இயக்கத்திற்கு வர உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், கடந்த மாதம் ஹெப்பகோடி மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்தது. அனைத்து சோதனைகளும் முடிந்து, அடுத்த வாரம் புதிய ரயில் இயக்கத்திற்கு வரும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால், மஞ்சள் வழித்தடத்தில் உச்ச நேரத்தில், ஏழு நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us