/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜம்பு சவாரிக்கு தயாராகும் அலங்கார ஊர்திகள்
/
ஜம்பு சவாரிக்கு தயாராகும் அலங்கார ஊர்திகள்
ADDED : செப் 27, 2025 11:12 PM

மைசூரு: ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பல மாவட்டங்களின் தனித்துவம் கொண்ட அலங்கார ஊர்திகள் தயாராகி வருகின்றன.
தசரா நிறைவு நாளான விஜயதசமி அன்று ஜம்பு சவாரி நடைபெறும். இந்த ஊர்வலத்தில், யானைகளை பின் தொடர்ந்து, பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள், பல மாவட்டங்களின் தனித்துவம் வாய்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.
நடப்பாண்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்துகள், மைசூரு நகரில் உள்ள பண்டிபாளையாவில் உள்ள ஏ.பி.எம்.சி., வளாகத்தில் அலங்கார ஊர்திகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக அந்த மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். அலங்கார ஊர்திகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுமையான, கவர்ச்சிகரமான, வெற்றி கதைகளை சொல்லும் ஊர்திகள் உருவாக்கும் பொறுப்பு, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இம்முறை காந்தி ஜெயந்தியன்று விஜயதசமி வருவதால், 'காந்தி பாதை' கருப்பொருளில் ஊர்திகளை உருவாக்கும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, எச்.ஏ.எல்., - எச்.எம்.டி., விமானப்படை, மைசூரு அகில இந்திய வானொலி - 90 ஆண்டுகளை கொண்டாடுதல், ராஜிவ் காந்தி அறிவியல் பல்கலைக்கழகம், கே.எம்.எப்., - சி.எஸ்.ஆர்.டி.சி.ஐ., - ஏ.ஐ.எஸ்.எச்., வஜ்ர மஹோத்சவம், மகாத்மா காந்தி கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம், கே.எஸ்.ஆர்.டி.சி., உள்ளிட்டவை பங்கேற்கின்றன.
கதக் மாவட்டத்தின் மணிக்கேஸ்வரா கோவிலின் தெப்பகுளம் உருவாக்கப்படுகிறது.
இதனுடன் சுற்றுலா துறையின் வளர்ச்சி திட்டங்களின் கண்காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக, 25 நாட்களாக 30 கலைஞர்கள் கடுமையான உழைத்து வருகின்றனர்.
இது தவிர, ரோனா தாலுகாவில் உள்ள சுடியாவின் நாகேஸ்வரா கோவில், தார்வாட் மாவட்டத்தில் உள்ள தேசிய கொடி உற்பத்தி மையம், கல்கடகியின் மரத்தொட்டில், நாவல்குந்த் ஜமுக்காளம், காந்தி சிலை உருவம் உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.