பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., தயானந்தாவுக்கு பதவி உயர்வு
பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., தயானந்தாவுக்கு பதவி உயர்வு
ADDED : செப் 09, 2026 03:53 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: ஐ.பி.எஸ்., தயானந்தாவுக்கு, டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் போலீஸ் பயிற்சி பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றிய ஐ.பி.எஸ்., தயானந்தாவுக்கு, டி.ஜி.பி.,யாக அரசு பதவி உயர்வு கொடுத்துள்ளது. காலியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் டி.ஜி.பி.,யாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த தயானந்தா, பெங்களூரு போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியவர்.
சின்னசாமி மைதானம் வெளியில், கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
