ஸ்ரீலட்சுமி கணபதி கோவிலில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை விழா
ஸ்ரீலட்சுமி கணபதி கோவிலில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை விழா
ADDED : ஜூன் 24, 2026 12:12 AM
வர்த்துார்: வர்த்துார் விநாயக் லே - அவுட்டில் உள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி கோவிலில், வரும் 27ல் விரக்ஹங்கள் பிரதிஷ்டை விழா நடக்கிறது.
பெங்களூரு வர்த்துார் பேரூராட்சி, மூலுார் கிராமம், விநாயக் லே - அவுட்டில் ஸ்ரீ லட்சுமி கணபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில், வரும் 27 ம் தேதி அய்யப்பன், சுப்பிரமணியர், தட்சிணா மூர்த்தி, சரஸ்வதி, வெங்கடேஸ்வர சுவாமிகளின் புதிய விக்ரஹங்கள் பிரதிஷ்டை விழா நடக்கிறது.
அன்று மாலை வேத முழக்கங்களுடன், அசயடி ரித்விஜரோ, கங்கேமாஜி, ஸ்வஸ்திவச்சனா, தேவநந்தியுடுன் யாகசாலை பிரவேசம், ஆராதனை, அக்னி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், ஹோமம், வாஸ்து ஹோமம், ஜலாதிவாசம், க்ஷீராதிவாசம், வஸ்திராதிவாசம், தன்யாதிவாசம், புஷ்பாதிவாசம், ஷயாதிவாசம், ஆதிவாசம், அஷ்டாவதன சேவை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாம் வழங்கப்படுகிறது.
ஜூன் 28 ல் காலை 5:30 மணிக்கு ஜைஷ்டா நட்சத்திரத்தில் சுப்ரபாத சேவை, வேதபாராயணம், கலச ஆராதனை, நவக்கிரஹ ஹோமம், கலா ஹோமம், ஸ்ரீலட்சுமி கணபதி ஹோமம், அய்யப்ப சுவாமி ஹோமம், சுப்பிரமணீஸ்வர சுவாமி ஹோமம், தட்சிணாமூர்த்தி சுவாமி ஹோமம், சரஸ்வதி சுவாமி ஹோமம், பிரதிஷ்டாபனை, நிரீக்ஷணே, தேனுதர்சனம், தர்ப்பண தரிசனம்,
கோமாஜி, அஷ்டதிக்கலி, கும்பாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், அஷ்டாவதான சேவையுடன் மஹா மங்களாரத்தி, ராஷ்ட்ரயோர்தா நடக்கிறது என மூலுார் கிராம பக்தர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
