/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டில்லி கார் குண்டுவெடிப்பு முதல்வர் சித்து இரங்கல்
/
டில்லி கார் குண்டுவெடிப்பு முதல்வர் சித்து இரங்கல்
டில்லி கார் குண்டுவெடிப்பு முதல்வர் சித்து இரங்கல்
டில்லி கார் குண்டுவெடிப்பு முதல்வர் சித்து இரங்கல்
ADDED : நவ 11, 2025 04:31 AM

பெங்களூரு: டில்லி கார் குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு, முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது 'எக்ஸ்' வலைதள பதிவு:
டில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில், அப்பாவி மக்கள் பலியான செய்தி வேதனை, அதிர்ச்சி அளிக்கிறது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். டில்லி குண்டுவெடிப்பை, கர்நாடக அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.
பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளேன். நெரிசலான இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் உள்துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன். போலீஸ் துறையுடன், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
முதல்வர் உத்தரவின் எதிரொலியாக, மாநிலம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக எல்லை வழியாக மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

