தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/என்னையும் சதியில் சிக்க வைக்க முயற்சி: டில்லியில் முதல்வர் சிவகுமார் பரபரப்பு

என்னையும் சதியில் சிக்க வைக்க முயற்சி: டில்லியில் முதல்வர் சிவகுமார் பரபரப்பு

என்னையும் சதியில் சிக்க வைக்க முயற்சி: டில்லியில் முதல்வர் சிவகுமார் பரபரப்பு


UPDATED : அக் 09, 2026 01:30 AM

ADDED : அக் 08, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 01:30 AM ADDED : அக் 08, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

‘‘முதல்வரான பின், என்னையும் சதியில் சிக்க வைக்க முயற்சி நடந்தது; இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்றும் தெரியும்; நேரம் வரும்போது கூறுகிறேன்,’’ என, சிவகுமார் கூறினார்.

டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தனியார் அமைப்புகள் மூலம் உங்களை உளவு பார்க்கின்றனர்; எச்சரிக்கையாக இருங்கள் என்று, அமைச்சர்களிடம் கூறினேன். நான் முதல்வரான பின், என்னையும் சதியில் சிக்க வைக்க முயற்சி நடந்தது.

என்னை சந்தித்து பேசியவர்கள் புகைப்படம் உள்ளது. நேரம் வரும்போது வெளியிடுவேன். பொறுப்பான பதவியில் உள்ள நான், தேவையில்லாமல் எதுவும் பேச மாட்டேன்.

என்னிடம் வந்த சந்தேக நபர்கள் பற்றி போலீசிடம் கூறியுள்ளேன். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்றும் தெரியும். அவர்களை கண்டு நான் பயப்பட போவது இல்லை. இதுபோன்ற வேலைகளுக்கு யாரை பயன்படுத்துகின்றனர் என்றும் தெரியும்.

எவ்வளவு சொத்து?



‘நைஸ்’ சாலை பகுதியில் யார், யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். சட்டசபையில் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன்.

தேவகவுடா குடும்பம் போல எனக்கு அதிக அறிவு இல்லாமல் இருக்கலாம். நான் பிரதமரின் மகனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கும் அரசியல் அனுபவம் உள்ளது.

எம்.எல்.சி., தேர்தலில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதால், இரு கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர். ஏதேதோ பேசி பிரச்னையை கிளப்ப பார்க்கின்றனர்.

வங்கதேசம், பிற மாநிலங்களில் இருந்து பலர் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். ஊடுருபவர்களை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை தான்.

தகுதியானவர்கள் ஓட்டுகளை நீக்க கூடாது என்று, தேர்தல் ஆணையம் தெளிவான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் முதல்வர் என்ற முறையில், எனது மாநிலத்தில் உள்ள தகுதியான வாக்காளர்கள் ஓட்டுகளை பாதுகாப்பது எனது கடமை.

இருண்ட நாள்



தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராடுவோர் மீதான அடக்குமுறை, இந்திய ஜனநாயத்திற்கு இருண்ட நாள்.

எஸ்.ஐ.ஆர்., பணியில் முறைகேடு செய்தோர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிராக, கவர்னரிடம் சென்று பா.ஜ., தலைவர்கள் புகார் அளித்தது, சரியல்ல. இதுபோன்று கீழ்தரமாக இறங்குவர் என எதிர்பார்க்கவில்லை.

பா.ஜ., தலைமை அலுவலகத்தில் படிவம் 7 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சதி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us