தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'பிங்க்' மெட்ரோ ரயில் பாதை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு

'பிங்க்' மெட்ரோ ரயில் பாதை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு

'பிங்க்' மெட்ரோ ரயில் பாதை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு


UPDATED : அக் 09, 2026 04:20 AM

ADDED : அக் 08, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 04:20 AM ADDED : அக் 08, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பிங்க் மெட்ரோ ரயில் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.

பெங்களூரின் காளேன அக்ரஹாராவில் இருந்து நாகவாரா வரை, 21.25 கி.மீ.,க்கு, 'பிங்க் லைன்' வழித்தடத்தில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

நுாதன போராட்டம்



இதில், காளேன அக்ரஹாராவில் இருந்து, தாவரகெரே வரை, 7.5 கி.மீ.,க்கு பாதை அமைக்கும் பணி, சிக்னலிங் உட்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டன. ஆனாலும் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளை கண்டித்து, சில நாட்களுக்கு முன்பு ரிப்பன் வெட்டி மக்கள் நுாதன போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காளேன அக்ரஹாராவில் இருந்து தாவரகெரே வரை 7.5 கி.மீ., துார மெட்ரோ ரயில் பாதையை, தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெங்கட சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். கடந்த 6 ம் தேதி மோட்டார் டிராலியில் சென்று, பிரதான வழித்தடம் மற்றும் உள்கட்டமைப்புகள்; 7ம் தேதி கொத்தனுார் பணிமனையில் உள்ள வசதிகள்; நேற்று பையப்பனஹள்ளியில் உள்ள, மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையத்தையும் ஆய்வு செய்தார்.

அனுமதி



பாதுகாப்பு கமிஷனர் நடத்திய ஆய்வின் போது, பரிந்துரை செய்யப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகே, ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

தற்போது 96.10 கி.மீ.,க்கு, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் ரயில் இயங்கினால், 103.60 கி.மீ., ஆக விரிவுபடுத்தப்படும். இது பெங்களூரின் பொது போக்குவரத்து அமைப்புக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us