sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 டில்லி போலீசார் மைசூரில் சோதனை

/

 டில்லி போலீசார் மைசூரில் சோதனை

 டில்லி போலீசார் மைசூரில் சோதனை

 டில்லி போலீசார் மைசூரில் சோதனை


ADDED : ஜன 29, 2026 06:14 AM

Google News

ADDED : ஜன 29, 2026 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு ஹெப்பால் தொழிற் பகுதியில், டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெய்டு நடத்தினர். சோதனை முடிவில் போதைப்பொருள் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டனர்.

மைசூரில் தற்போது போதைப்பொருள் கலாசாரம் தலைதுாக்க துவங்கி உள்ளது. கடந்தாண்டு இதுபோன்று மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மைசூரில் அதிரடி ரெய்டு நடத்தி, சட்ட விரோதமாக இயங்கி வந்த போதைப்பொருள் உற்பத்தி மையத்தை கண்டுபிடித்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது மாநில அரசுக்கும், மைசூரு நகர போலீசாருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு குழுவினருக்கு, மைசூரு ஹெப்பால் தொழில் பகுதியில் போதைப்பொருள் தயாரிப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதையடுத்து நேற்று காலை ஆறு பேர் கொண்ட குழுவினர், இப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

பல மணி நேர சோதனைக்கு பின், போதைப்பொருள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.

தகவல் அறிந்த நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பேசி தகவல்களை பெற்றார்.






      Dinamalar
      Follow us