UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
– நமது நிருபர் –
அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி அல்வாவை, வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
செய்முறை
முதலில், ஒரு பெரிய வாணலியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதித்ததும் பொடித்த கருப்பட்டியை சேர்க்க வேண்டும்.
இதில், அரிசி மாவு, தேங்காய் பாலை சேர்த்து, கெட்டியாகி விடாமல் கிளறி கொண்டிருக்க வேண்டும்.
இதில், சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை கிளறவும்.
இதில், வறுத்தெடுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள் சேர்த்து கிளறவும். பின், நெய் தடவிய பெரிய பாத்திரத்தில் ஹல்வாவை போடவும். நன்கு ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி, பரிமாற வேண்டியது தான்.
